October 2026
29 Oct 2026
அனுபவம் என்பது தவறுகளைத் திருத்திக் கொள்வது … ஆணவம் என்பது தவறுகளை நியாயப்படுத்துவது … ஆணவம் வாழவிடாது… அனுபவம் வீழவிடாது… காலை வணக்கம்….
28 Oct 2026
யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ, அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான்…. காலை வணக்கம்…
27 Oct 2026
நல்லவர்களின் நட்பென்பது அடிக்கரும்பை போன்றது .. வெட்டினாலும், பிழிந்தாலும் தன் சுவை மாறாதது …. சேமியுங்கள் அந்த நட்பை … காலை வணக்கம் ..
26 Oct 2026
நேர்மையாக தோற்றாலும் பரவாயில்லை ... நம்பிக்கை துரோகத்தால் வென்று விடாதீர்கள்... காலை வணக்கம்….
25 Oct 2026
நம்மை புரியாதவர்களுக்கு, நம் வார்த்தையும் புரியாது .. என்றும்.. காலை வணக்கம்…
24 Oct 2026
மிதிபட்ட இடத்திலேயே வளர்ந்து காட்டுங்கள் … அப்பொழுதுதான் மிதித்தவர்களுக்கு தெரியும், நீங்கள் யார் என்று… காலை வணக்கம் ....
23 Oct 2026
எல்லோரின் கவனத்திலும் இருக்க விழைந்ததும், அதற்கென மெனக்கெட்டதும், ஒரு காலம்.. அத்தனை பேரின் கவனத்திலிருந்தும், மறைந்திருக்க விரும்புவது, நிகழ்காலம்….. காலை வணக்கம்….
21 Oct 2026
பெருங்கனவு காண்பவனுக்கு, பாதைகள் பூப்படுக்கையாவதில்லை... முட்களே அவன் வெற்றிக்கு முன்னுரை எழுதுகின்றன.... காலை வணக்கம் ..
21 Oct 2026
தன்னை அறிவாளி என்று நம்புவதில் தவறில்லை .. தான் மட்டும்தான் அறிவாளி என்று நம்புவதுதான் தவறு.. காலை வணக்கம்…..
20 Oct 2026
ஆற்றை கடக்கும்வரைதான் ஓடம் தேவை .. கடந்தபின் ?? நீ வேறு .. நான் வேறு தானே ? காலை வணக்கம் ...
19 Oct 2026
அலையின் உயரம் பார்த்து அஞ்சினால் ? கரையே கதி .. காலை வணக்கம். ....
18 Oct 2026
அடுத்தவர்களை தேடித்தேடி, போய்க் கொண்டே இருந்தால், நம்மை, நாமே தொலைத்து விடுவோம்.. காலை வணக்கம்..
17 Oct 2026
வியந்து பார்த்தல் பெரிதல்ல .. வியக்க வைப்பது தான் பெரிது... அடுத்தவர் வியக்குமாறு வாழுங்கள் .. காலை வணக்கம் ...
16 Oct 2026
தன்னை புதைக்கும் இடம் கூட தெரிய தெரியாதவர்கள் தான், இந்த பூமி , தனக்கு தான் சொந்தம் என்று சொல்கிறார்கள் .. காலை வணக்கம்..
15 Oct 2026
இந்த வாழ்வு இன்னும் சலிக்காமல் இருக்க, ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும்.. யாரேனும் ஒருவரை நீங்கள் நேசித்துக்கொண்டிருப்பதும், யாரேனும் ஒருவர் உங்களை நேசித்துக் கொண்டிருப்பதும் தான்.. காலை வணக்கம்…
14 Oct 2026
நாளை, எல்லாம் நல்லபடியாய் முடிந்துவிடும் என்று நினைப்பது நம்பிக்கை... முடியாவிட்டால் சமாளிக்கலாம் , என்பது தன்னம்பிக்கை…. காலை வணக்கம். ...
13 Oct 2026
பறக்கத்தான் சிறகுகள் வேண்டும்…. கிளைதாவ, குரங்கின் கரங்கள் போதாதா ! காலை வணக்கம்….
12 Oct 2026
சிலரைப் புரிந்து கொள்ள முடியாது….. சிலரைப் புரிந்து கொள்ளக் கூடாது….. காலை வணக்கம்….
11 Oct 2026
தாள இயலா துயரை கடந்து வந்தவர்களிடம், ஞானியின் முகத்தில் இருப்பதை போலவே , ஒரு அமைதி இருக்கிறது….. காலை வணக்கம்….
9 Oct 2026
ஆசை எனும் சிறு குமிழிகள் ஒன்று சேர்ந்து , பேராசை எனும் மிக பெரிய குமிழியாகி, அது உடைந்து போகும் தருணம் வரும்போது , ஒன்று நாம் ஞானியாகியிருப்போம், அல்லது இறந்திருப்போம்.. காலை வணக்கம்…
7 Oct 2026
தொலைந்து போவதை பற்றி சாவிக்கு என்ன கவலை என்பவரா நீங்கள் ? சாவி தொலைந்த பூட்டுக்கு மறுவாழ்வு உண்டு. …. பூட்டை இழந்த சாவிக்கு இன்னொரு பூட்டு கிடைக்குமா???? காலை வணக்கம்….
7 Oct 2026
போதிக்கும் போது கற்றுக் கொள்ளாத பாடத்தை , பாதிக்கும் போது தான் கற்றுக் கொள்கிறோம்... காலை வணக்கம்…..
5 Oct 2026
நம்பிக்கை என்பது நடக்குமென்ற நம்பிக்கையல்ல... நடக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்புதான் .... காலை வணக்கம் ....
4 Oct 2026
சிதிலமடைந்த பின்பே புணரமைத்தல் , அதன் பிறகே குடமுழுக்கு … எப்போதும் , நன்றாக இருப்பவைகளுக்கு தனிக் கவனம் கிடையாது…. காலை வணக்கம்….
3 Oct 2026
சேர்ந்து பேச ஒரு குரலும், சேர்ந்து நடக்க ஒரு விரலும் கிடைத்தால் , நீங்கள் பாக்கியசாலி... காலை வணக்கம் ...
2 Oct 2026
ஆறுதல் தேடுவதில் தவறில்லை... அதை யாரிடம் தேடுகிறோம் என்பதில்தான் , நம்மில் பலர் தவறி விடுகிறோம்…. காலை வணக்கம்…
1 Oct 2026
பலர் நல்லவர் என்பதற்கு சாட்சி, அவர்கள் செய்த எந்த தவறுக்கும் , சாட்சி இல்லை என்பதே.... காலை வணக்கம் ...