குறிஞ்சிட்டு

September 2026

  1. 14 Sept 2026

    தவறு செய்பவனைப் போல், நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு யாரையும், காண முடியாது. காலை வணக்கம் ..

  2. 13 Sept 2026

    மனிதனும் சிலந்தியை போலத்தான் .. இறை பிடிக்க தான் பின்னும் வலையிலேயே, ஒரு நாள் தானும் மாட்டிக்கொண்டு, செத்துப்போகிறான் .. காலை வணக்கம் ...

  3. 12 Sept 2026

    நம்பியவர்கள் விலகிய போது, நான் அவர்களை தேடவில்லை.. என்னை தேடினேன்… காலை வணக்கம்….

  4. 11 Sept 2026

    எதை வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தேனோ , அதையே , வேண்டாம் என்று சொல்ல வைத்து விடுகிறது , இந்த பாழாய் போன வாழ்க்கை…. காலை வணக்கம்….

  5. 10 Sept 2026

    இது மண்ணுக்கான சிறிய பயணம் .. மண்னில் பிறந்து , மண்ணுக்காய் போராடி , மண்ணை வென்று , மண்ணில் அடங்கும் பயணம்… இங்கு நிலையானது மண் மட்டுமே.. காலை வணக்கம்….

  6. 9 Sept 2026

    மன்னிப்பவன் பெரிய மனிதனாம்… எனக்கு அந்த அதிகாரமெல்லாம் வேண்டாம்… மறந்து புறந்தள்ளி அடுத்த வேலையைப் பார்க்கும் மனம் மட்டும் போதும்…. காலை வணக்கம்…

  7. 8 Sept 2026

    சோள தட்டு கூட , கட்டா இருந்தாதான் மரியாதை …. தனியா இருந்தா , முறிச்சு போட்டுட்டு போயிருவாங்க …. துணை சேர்த்தல் நலம்.. காலை வணக்கம்….

  8. 7 Sept 2026

    நமக்கு பிடிக்கும் என்பதற்காக பிடித்தே வைத்திருக்க முடியுமா..? காலை வணக்கம்…

  9. 6 Sept 2026

    நல்லவர்களைச் சந்தித்தால், கிடைப்பது மகிழ்ச்சி.... கெட்டவர்களைச் சந்தித்தால், கிடைப்பது அனுபவம்... சிறந்தவர்களைச் சந்தித்தால்? கிடைப்பது நினைவு!!! காலை வணக்கம் .....

  10. 5 Sept 2026

    படித்த படிப்பு நமக்கு கற்றுத் தருவதை விட, சிலரின் அசாதாரண நடிப்பு, சிறப்பாக கற்றுத் தருகிறது... காலை வணக்கம் ..

  11. 4 Sept 2026

    மரம், தன் நிழலில் யார் ஓய்வெடுக்கிறார்கள் என்று ஒருபோதும் கேட்பதில்லை….. கல்லெறிந்தவனுக்கும், காத்திருந்தவனுக்கும் அதே நிழல் தான்…. காலை வணக்கம்….

  12. 3 Sept 2026

    நம்மை ஒருவர் மரியாதை குறைவாக நினைக்க காரணம், நாம் அவர்களுக்கு அதிகம் மரியாதை கொடுப்பதே... காலை வணக்கம்….

  13. 2 Sept 2026

    யாருமே வேண்டாம் என்று முடிவு செய்த பின்பும் , இந்த உலகம் , நமக்கு யாரோ ஒருவரை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.. காலை வணக்கம்…